உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர, 18வது மைல்கல் மற்றும் கொட்டுகொட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ராகம, களனி, சீதுவ மற்றும் கட்டுநாயக்க பகுதிகளைச் சேர்ந்த 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதன் போது, சந்தேகநபர்களிடமிருந்து 27 கிராம் 255 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

UPDATE : மேலும் இரு பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

ஜனாதிபதி தேர்தலில் 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்