சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-பேலியகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) இரவு 11.05 மணியளவில் மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட, தொரண சந்தியில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் இருந்து 40 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் செய்த விசாரணைகளின் அடிப்படையில் பேலியகொட, களனி சந்தியில் வைத்து 75 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வஹரக பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் மாளிகாவத்த பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

Related posts

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு

கோட்டாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றிற்கு அறிவிப்பு!