உள்நாடுவிளையாட்டு

ஹெட்ரிக் சாதனையுடன் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 76 ஓட்டங்களைப் பெற்றார்.

அதேபோல், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 70 ஓட்டங்களைப் பெற்றார். கமிந்து மெந்திஸ் 57 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 38 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், சிம்பாப்வே அணி சார்பில் ரிச்சர்ட் ங்காரவா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், 299 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று, 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சிம்பாப்வே அணி சார்பில் சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றார்.

அதேபோல், பென் கரன் 70 ஓட்டங்களையும், அணித்தலைவர் சீன் வில்லியம்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், அசித பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும், தில்ஷான் மதுசங்க 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி, தில்ஷான் மதுசங்க ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Related posts

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

editor

இருப்பது போதாதா ? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள் ? சஜித் பிரேமதாச கேள்வி

editor