அரசியல்உள்நாடு

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் முக்கிய வேலைத்திட்டங்கள்

காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியின் பலனாக முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை மற்றும் அதனை அண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை இடங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, ஹிஸ்புல்லாஹ் எம்.பி நேரில் சென்று, காத்தான்குடா நகர சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இன்று (31) பார்வையிட்டார்.

இதன்போது, தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக வேலைத்திட்டங்கள் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாக நிறைவு செய்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக கையளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

காத்தான்குடி நகரின் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவித்து, உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் சிறந்த வசதிகளை வழங்கும் நோக்கில், ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் முக்கியமானதாக அமைந்துள்ளது.

-ஊடகப் பிரிவு

Related posts

இரண்டாவது நாளாக இன்றும் மின்வெட்டு

தேசிய பட்டியல் விவகாரம் – இன்று கலந்துரையாடல் 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

editor