உள்நாடு

ஹிருணிகாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

(UTV | கொழும்பு) –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.
ஹிருணிகா பிரேமச்சந்திர நோய்வாய்ப்பட்டிருந்தமையால் நீதிமன்றத்திற்கு வரவில்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியதன் காரணமாக ஹிருணிகாவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

editor

டிலித்- விமல்- கம்பன்பில – சன்ன ஒன்றாக இணைந்து ஆரம்பித்துள்ள ‘சர்வ ஜன பலய’

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்