ஹிக்கடுவை, மலவென்னவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இன்று மாலை வேகன் ஆர் காரில் பயணித்த ஐந்து பேரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், ஒருவர் மட்டுமே காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.