உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் தலைமறைவு!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை கைது செய்வதற்காக நேற்று (15) ஹம்பாந்தோட்டை பகுதியிலும் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சோதனை செய்த போதிலும், அவர் தப்பிச் சென்றதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 8 சொகுசு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 க்ரூஸர்கள் உட்பட 21 மோட்டார் சைக்கிள்கள் சமீபத்தில் ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவை பூங்காவில் உள்ள ஒரு களஞ்சியத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

Related posts

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விஷேட அறிவித்தல்

பாராளுமன்றம் கூடியது [நேரலை]

புத்தாண்டு காலப்பகுதியில் ரூ. 5,000 அத்தியாவசிய பொதி ரூ. 2,500 விலையில் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor