உள்நாடுபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி!

ஒன்றரை வருடற்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் உப்பு உற்பத்தி 40,000 மெட்ரிக் டொன் என்று இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக கூறுகிறார்.

பாதகமான வானிலை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை நிறுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

பூந்தல உப்புச் சுரங்கத்தில் உப்புச் சுரங்கப் பணிகள் இன்று காலை ஆரம்பமாகி, உப்பு உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்தன.

கடந்த ஆண்டு, ஒரு லட்சம் மெட்ரிக் டொன் உப்பு எதிர்பார்க்கப்பட்டாலும், 40,000 மெட்ரிக் டொன் உப்பு மட்டுமே கிடைத்தது.

ஹம்பாந்தோட்டை மகாவலி பகுதியில் உப்பு உற்பத்தி நாளை (22) ஆரம்பமாகும் என்று டி. நந்தன திலக தெரிவித்தார்.

Related posts

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

19 வயது இளம் பெண் சடலமாக மீட்பு – 30 வயது ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

editor

சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய மதுபானம்

editor