ஹம்பாந்தோட்டை வீட்டுத் தொகுதி ஒன்றில் இரகசியமாக இயங்கி வந்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை களுத்துறை குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சுற்றிவளைத்தது.
இதன்போது ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சுரங்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகாவார்.