உள்நாடு

ஹட்டன் வாடி வீட்டில் தீ

(UTVNEWS | HATTON) –ஹட்டன், மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள வாடி வீடு ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாடி வீட்டில் திடிரென தீ பற்றியமையால் பகுதி அளவில் குறித்த வாடி வீடு எறிந்துள்ளது.

ஹட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஸ்மதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

editor

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரம் பற்றிய அறிக்கை

இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க IMF உத்தேசம்