உள்நாடுபிராந்தியம்

ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயா ஹூலங்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையில் இருந்து நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் இருந்து விலகி கவிழ்ந்தமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த போது முச்சக்கர வண்டிக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினால் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர அறிவிப்பு

editor

மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை