உள்நாடு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(UTV | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் இன்று(10) அதிகாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தொலைபேசி கம்பங்கள் மற்றும் மின்சார கம்பங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு

பாறையிலிருந்து தவறி விழுந்த வௌிநாட்டு பெண் பலத்த காயம்

editor

ரயில் பொதிசேவை இன்று முதல் மீளவும்