உள்நாடுபிராந்தியம்

ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் இன்று (03) இரவு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மின்சாரக் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்தில் தொழிலாளர்களின் உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

நாட்டில் இன்றும் மின்வெட்டுக்கு சாத்தியம்

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை