உலகம்சூடான செய்திகள் 1

ஹஜ் ஒப்பந்தம் ஜெத்தாவில் கையெழுத்தானது

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கை யாத்திரிகர்களுக்கு அனுசரணை வழங்குவதற்கான ஹஜ் ஒப்பந்தம் நேற்று (11) சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவின் ஹஜ் துணை அமைச்சர் அப்துல்ஃபதா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

ஹஜ் யாத்திரை பருவம் தொடர்பான வசதிகள் மற்றும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் ஷேக் முனீர் முலாஃபர், ரியாத்துக்கான இலங்கை தூதர் அமீர் அஜ்வத், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் மற்றும் ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதர் மஹ்ஃபுசா லாபீர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்

Related posts

காலி வீதியை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

டிஜிட்டல் அடையாள அட்டை – நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் – இந்திய நிறுவனம் வெளியேறிவிடும் – ஜனாதிபதி அநுர

editor