வகைப்படுத்தப்படாத

ஸ்வீட் கார்லிக் சிக்கன் எப்படி செய்யலாம்?

(UTV|COLOMBO) – நாண், சப்பாத்திக்கு ஸ்வீட் கார்லிக் சிக்கன் (sweet garlic chicken) அருமையாக இருக்கும். இதன் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
கோழி – 1 கிலோ (எலும்பு நீக்கியது)
கோதுமை மா- 1/2 கப்
பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
பட்டர் – 1 மேசைக்கரண்டி
பூண்டு இஞ்சி விழுது – 2 மேசைக்கரண்டி
சோயா சோஸ் – கால் கப்
தேன் – 5 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் – சிறிதளவு
பிரவுண் சுகர் – 1 மேசைக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, பூண்டு விழுது, மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கோழி துண்டுகளை இந்த கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் போட்டு சூடானதும் பூண்டு, இஞ்சி, சோயா சோஸ், தேன், பிரவுண் சுகர், சேர்த்து நன்கு சூடாக்கிய பின் பொரித்த இறைச்சி துண்டுகளை போடவும்.

கடைசியாக வறுத்த எள் கொஞ்சம் தூவவும். அடுப்பில் இருந்து இறக்கி வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.

சூப்பரான ஸ்வீட் கார்லிக் சிக்கன் (sweet garlic chicken) ரெடி.

Related posts

வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

ஜப்பானில் நிலநடுக்கம்

ஏனைய மீனவர்களுக்கும் PCR பரிசோதனை