சூடான செய்திகள் 1

ஸ்ரீ விபுல திஸ்ஸ நாஹிமிகம வீடமைப்புக் கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) “அனைவருக்கும் நிழல்” என்ற திட்டத்தின் கீழ் இரத்தினபுரி எஹலியகொட கணேகொடவில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ விபுல திஸ்ஸ நாஹிமிகம பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது..

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள்அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வீடமைப்புக் கிராமத்தில் 31 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான கடன்வசதிகள் 150 பயனாளிகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

“அனைவருக்கும் நிழல்” திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 170 ஆவது மீள் எழுச்சிக் கிராமமாகும்.

 

 

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றில்

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்-நுகர்வோர் அதிகார சபை