அரசியல்உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும்.

கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த முறை நாம் 74வது ஆண்டு நிறைவைக் கட்சித் தலைமையகத்தில் கொண்டாடுகிறோம்.

அதற்காக, மாவட்ட அமைப்பாளர்களுக்கும், கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

அண்மைய காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் மீண்டும் மறுசீரமைக்கப்படுகின்றன

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இந்த ஆண்டு நிறைவுடன் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

பத்திரிகையாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு!

editor

நாடு முழுவதும் சீரற்ற வானிலை – 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது

editor