சூடான செய்திகள் 1

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011.03.31 அன்று வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு ஸ்ரீரங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே குறித்த பிடியாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

கம்பெரலிய விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 47 புதிய கிராம வீதித் திட்டங்கள்

18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்