சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு. கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு இரு குழுக்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.

இரவு 7.30 மணியளவில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகிய கூட்டம், சுமார் 2 மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது.

எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதுடன் குறித்த கூட்டம் இரண்டு மணித்தியாலங்கள் வரை நடைபெற்றது. கடந்த காலத் தேர்தலின் போதான விடயதானங்கள் மற்றும் குறைகளை எதிர்காலத்தில் நிவர்த்திப்பதற்காக இரு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களுக்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்