உள்நாடு

ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்

(UTV|கொழும்பு) – ஏயார் பஸ் கொள்வனவு தொடர்பில் விளக்கமளிக்கவே அவர்கள் கோப் குழுவுக்கு அழைக்பட்டுள்ளதாக, பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (20) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அரச வழங்கள் சம்பந்தமான நிதி விதிமுறைகள் குறித்த பாராளுமன்ற விவாதமும் நாளை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமும் நாளை இடம்பெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

குருணாகலையில் கேபிள் கார் விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

editor

எமது பாடத்திட்டங்கள் பழமையானவை – நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.