ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம்.பைறூஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (20) இடம்பெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மட்டக்களப்பு பிராந்தியம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பாசிக்குடா தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.ஹுஸைர் (இஸ்லாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான எம்.பி.எம்.பைறூஸ் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பாளர் ஏ.சீ.ஏ.சிப்லி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி கிளைகளின் பொறுப்பாளர்கள், அங்கத்தவர்கள், வளவாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்