உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக எம்.பி.எம்.பைறூஸ் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மீடியா போரத்தின் 30 ஆவது வருடாந்த மாநாடும் புதிய நிர்வாகத் தெரிவும் மீடியா போரத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையில் கொழும்பு தபால் தலைமைய கேட்போர் கூடத்தில் (28) சனிக்கிழமை இடம்பெற்றது.

இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாவது அமர்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமா லெப்பை, காதர் மஸ்தான் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இரண்டாவது அமர்வில் இடம்பெற்ற நிர்வாகத் தெரிவின் போது வாக்களிப்பு மூலம் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் 84 வாக்குகளைப் பெற்று மீடியா போரத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், செயலாளர் தெரிவின்போது ஊடகவியலாளர் சம்ஸ் பாஹிம் 78 வாக்குகளைப் பெற்று செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினியின் இறுதிக் கிரியை நாளை

editor

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்