அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பனம் செலுத்தியது

பொத்துவில் தொகுதி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதி உள்ளூராட்சி சபைகள் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையில் தனித்துப் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் இன்று (11.03.2025)
கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்தீன் அவர்களும் இதில் கலந்து கொண்டார் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் பொத்துவில் பிரதேச சபை. அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை. அட்டாளைச்சேனை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை.

-கே எ ஹமீட்

Related posts

உப்பு தட்டுப்பாடு – பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

editor

“அரசியல் புகலிடம் கோர, நாடகம் போடும் உத்திக்க”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை கிடைக்கும் – மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் சஜித் வாக்குறுதி

editor