உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறிக்கை

(UTV | கொழும்பு) –   உத்தேச தேசிய சபையில் பங்கேற்பதை தவிர்க்க தீர்மானித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் மற்றும் தேசிய சபை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச தேசிய சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள சுதந்திரக் கட்சி தீர்மானித்த போதிலும், குறுகிய அரசியல் நலன்களை பொருட்படுத்தாது இந்த நாட்டில் தேசத்தின் நன்மை மற்றும் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு சாதகமான கொள்கை தீர்மானத்திலும் எதிர்க்கட்சியில் இருந்து செயற்படுவோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் : இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

பயணக் கட்டுப்பாட்டினை கண்காணிப்பதற்கு சுமார் 22,000 பொலிஸார் கடமையில்