உள்நாடுவிசேட செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி முதல் நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆரம்பமான இந்த போராட்டாத்தால் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Related posts

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

திருடர்களின் ஆதரவில்லாமல் நாட்டு மக்களின் ஆதரவுடன் நாட்டின் பொறுப்புக்களை கையேற்பேன் – சஜித்

editor