வகைப்படுத்தப்படாத

ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை

(UTV|INDIA)-நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் தேதி துபாய்க்கு அனுப்பிவைத்தார். இந்த தனி விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, துபாய் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.

நேற்று மாலை வரை 3 நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two held over Kalagedihena assault

25 மாவட்டங்களிலும் தற்காலிக விசேட முகாம்கள்

இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது!!