உள்நாடு

ஸ்ரீதரனுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

(UTV | கொழும்பு) –

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் தலைவர் தெரிவுக்கான நிகழ்வு இன்று இடம் பெற்றது. குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உங்களுடைய சேவைக் காலத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதோடு, வடக்கு கிழக்கு தமிழர்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய தங்களின் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 100 பேர் வீடுகளுக்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

பெக்கோ சமனின் நெருங்கிய கூட்டாளி அதிரடி கைது!

editor