உலகம்

ஸ்பெயின் தலைநகர் முடக்கம்

(UTV | ஸ்பெயின்) – ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அந்நாட்டின் தலைநகர் மட்ரிட் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை மீண்டும் முடக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் ஸ்பெயினின் மட்ரிட் நகரில் 133,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு 769,000 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் 31,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்களை வௌி பிரதேசங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 06 பேருக்கு அதிகமானவர்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

editor

உக்ரைன் ஜனாதிபதியின் கார் விபத்து

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை – ரஷ்ய ஜனாதிபதி புடின்

editor