உலகம்

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை கடந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறதைத்தொடர்ந்து இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 565 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஸ்பெயினில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,043ஆக உயர்ந்துள்ளது.

Related posts

மார்ச் 2022-க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம்

கனடா – பிரிட்டன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்!

கனடா அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு!