வகைப்படுத்தப்படாத

ஸிம்பாப்வே தேர்தல்: படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

(UTV|ZIMBABWE)-ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு உதவுவதற்காக, ஹராரேயின் மத்திய பகுதியில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த MDC கூட்டணி, இது ரொபட் முகாபே ஆட்சியின் இருண்ட நாட்களை ஞாபகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

ஸிம்பாப்வேயின் நீண்ட கால ஆட்சியாளரான ரொபட் முகாபே ஆட்சியிலிருந்து விலகியதன் பின்னர், கடந்த திங்கட்கிழமை ((30) நடந்துமுடிந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் நெல்சன் சமிஸா வெற்றி பெற்றுள்ளதாக MDC கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Light showers expected in several areas today

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்

Nuwara Eliya Golf Club launches membership drive