அரசியல்உள்நாடு

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிக்கல் – முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரிடம் CID விசாரணை

கடந்த அரசாங்கத்தின்போது விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பஸ் ஒன்று முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணை நடத்தவுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டதற்கான புதிய ஆதாரங்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஷிரந்தி ராஜபக்க்ஷவின் தலைமையில் செயற்படுத்தப்பட்ட ‘சிரிலிய’ திட்டம் தொடர்பான இந்த விசாரணை குறித்து முன்னர் கவனம் செலுத்தப்பட்டது.

சிரிலிய கணக்கு தொடர்பான ஏழு முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முறைப்பாடுகள் அளித்தது, அவற்றில் ஆறு பின்னர் சட்டமா அதிபர் துறையின் ஆலோசனையின் பேரில் மூடப்பட்டன.

Related posts

இன்று நள்ளிரவு முதல் குறைகிறது அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம்

அநுர அலைக்கு முடிவு – நாம் பெருவெற்றி பெற்றுள்ளோம் – சுமந்திரன்

editor

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு