உள்நாடு

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

(UTV | கொழும்பு) – ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நாளை (12) இடம்பெறவுள்ளது.

நாளை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறவுள்ளதாக பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதுடன், ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

 

Related posts

அரிசி விலை அதிகரிப்பு – உணவு பொதியின் விலையும் அதிகரிக்கப்படும்

editor

இரு நாள் இந்திய விஜயத்தில் பசில் ராஜபக்ஷ

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது