விளையாட்டு

ஷகிப் அல் ஹசனுக்கு புதிய பொறுப்பு

(UTV | பங்களாதேஷ் ) – பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து மொமினுல் ஹக் விலகியுள்ளார்.

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷகிப் அல் ஹசனும், துணை தலைவராக லிட்டன் தாஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

35 வயதான ஷாகிப் அல் ஹசன் இதற்கு முன்னர் பல தடவைகள் பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்கு தலைவராக இருந்துள்ளார், இன்னும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார்.

அவரது தலைமையின் கீழ், முன்னாள் தலைவர் மொமினுல் ஹக் 3 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று 12ல் தோல்வியடைந்துள்ளார்.

Related posts

VIDEO உசைன் போல்டின் சாதனைக்கு சவாலாக களமிறங்கியுள்ள 7 வயது சிறுவன்

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

சச்சினின் சாதனையை முறியடித்த கோஹ்லி