அரசியல்உள்நாடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இணைப்பாளராக நியாஸ் நியமனம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான புத்தளம் மாவட்ட இணைப்பாளராக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 21 ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் சம்மந்தமான சகல வேலைத்திட்டங்களுக்குமான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக முன்னாள் வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் பெயரில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளது மீள் ஆரம்பம் தொடர்பில் உரிய தரப்புக்கு சுற்றறிக்கை

ஞானசார தேரரின், ‘அப சரண’ என்ற வசனத்தினால் தான் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் [VIDEO]

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்