அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், இன்று (14) காலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.

காலை 10 மணியளவில் காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பொதுஜன பெரமுன காரியாலயத்திற்கு வருகைதருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தூதுவருடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, C.B. ரத்நாயக்க, ஜயத்த கெட்டகொட மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

Related posts

கொரோனா : மேலும் 07 பேர் உயிரிழப்பு

ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

பாராளுமன்ற தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு குறித்து வௌியான அறிவிப்பு

editor