சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அது இன்று அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

மீண்டும் ஐ.தே.க மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி: எதற்காக? இந்த திடீர் மாற்றம்

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில்