வகைப்படுத்தப்படாத

வௌ்ள நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்ட மாணவன் பலி!

(UDHAYAM, COLOMBO) – பெலிஹத்த வஹலக்கொட பிரதேசத்தில் வௌ்ள நீரோட்டத்தில் சிக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் வஹரக்கொட பிரதேசத்தை சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவர் பாடசாலை வேன் வாகனமொன்றில் இன்று காலை பாடசாலை சென்றுள்ள நிலையில் , சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் வேன் மீண்டும் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

முற்பகல் 8.45 மணியளவில் வஹரக்கொட விகாரைக்கு அருகில் வீதி நீரில் மூழ்கியிருந்த காரணத்தால் , வேன் வாகனத்தில் இருந்து குறித்த மாணவர் இறங்கி அவரது வீட்டை நோக்கி சென்றுள்ளார்.

இதன் போது அவர் நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

பின்னர், பிரதேசவாசிகளால் மாணவர் காப்பாற்றப்பட்டு தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் ்உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

Related posts

விஜயதாச ராஜபக்‌ஷ விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்

dengue: Over 29,000 cases reported island-wide

எமது நாட்டு பொருட்களின் தரம் தொடர்பில் சீனாவின் கருத்து அடிப்படையற்றது