உள்நாடு

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10,000 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (21) அதிகாலை நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

இன மத பேதங்கள் பாராது நாம் ஒன்றிணைவோம் – சஜித்

editor

“அங்கஜனுக்கு உயர் பதவியை வழங்கியது” அங்கஜன் இராமநாதன்

மேல் மாகாண விசேட சோதனையில் 948 பேர் கைது