கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டதற்காக இவ்வாறு ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.