உள்நாடு

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன பிணையில் விடுதலை!

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்வை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழைவதற்கும், வெளிநாடு பயணிப்பதற்கும் தடை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் வழங்கிய ரிஷாட் எம்.பி

editor

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்