உள்நாடு

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

48 மணித்தியாலங்களின் பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

Related posts

புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று

G.C.E (O.L.) மாணவர்களுக்கு இனி IT பாடம் கட்டாயம்!

எதிர்க்கட்சியை அழிக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது – சஜித் பிரேமதாச

editor