உள்நாடு

வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

(UTV|முல்லைத்தீவு) – முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள புனரவாழ்வு பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள பகுதியில் நேற்று முன்தினம் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியில் நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ் அகழ்வுப்பணியின் போது மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை சட்ட அதிகாரியினால் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்பு

editor

இலங்கையின் முதல் நீர் மின்கலம் மின்சார திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

editor

ரோஹிங்கியா அகதிகளுக்காக எடுக்கப்படும் மனிதாபிமான தீர்மானத்திற்கு ஆதரவு – சஜித் பிரேமதாச

editor