வகைப்படுத்தப்படாத

வேலையில்லா பட்டதாரிகள் 1000 பேருக்கு திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) -வட மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபடும் வேலையில்லா பட்டதாரிகளுள் 1000 பேருக்கு திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி தமக்கு உறுதியளித்துள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதியை தாம் சந்தித்த போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

இந்த வேலைவாய்ப்பு குறித்து ஏற்கனவே ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட போதும், அதனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த அறிவிப்பு தொடர்பில் எழுத்து மூலமான உறுதியான அறிவிப்பு கிடைக்கும் வரையில் தாங்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று வடமாகாண தொழிலற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

තේ දළු මිල පහත වැටෙයි

Two drug traffickers held by Navy in Hambantota

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு