வகைப்படுத்தப்படாத

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள்-ரோஹித போகொல்லாகம

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

நேற்று (05) பொத்துவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியதாகவும் ​அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 6068 வேலையில்லா பட்டதாரிகள் காணப்படுவதாகவும் இதில் இம்மாதம் 20 ஆம் திகதி 387 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் மிகுதி பட்டதாரிகளுக்கான நியமனங்கள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களுக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனரின் வேலைவாய்ப்பு வழங்கல் தொடர்பான திட்டத்துக்கமைவாக கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் விடயம் தொடர்பில் கூறியபோதே ஜனாதிபதி மைத்திரிபால தனக்கு உறுதிமொழி வழங்கியதாகவும் கிழக்கு ஆளுனர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று உலக ரேடியோ தினம் 2018

Prevailing windy conditions likely to continue – Met. Department

Navy arrests a person with ‘Ice’