உள்நாடுபிராந்தியம்

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் இன்று (08) சனிக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு, வரவு செலவு திட்டத்தில் 35,000 வேலைவாய்ப்பினை பட்டதாரிகளுக்கு வழங்குவதை உறுதி செய், படித்து பட்டம் பெற்றும் பதவி இல்லை ,வேலை இல்லை என்றால் பல்கலைக்கழகம் எதற்கு, வேண்டாம் வேண்டாம் போட்டி பரீட்சைகள் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான பட்டதாரிகள் பங்கு பெற்றிருந்தனர்.

Related posts

ரயில் சேவையில் பாதிப்பு

கொரோனா ஜனாஸா எரிப்பின் அரசின் நிலைப்பாடு ஒரு பழிவாங்கல் [VIDEO]

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

editor