வகைப்படுத்தப்படாத

வேன் மோதி வவுனியா மாணவி உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – பதவிய வீதியில், போகஸ்வெவ வெஹெரதென்ன பிரதேசத்தில் வேன் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் பாடசாலை முடிந்து பேருந்து ஊடாக வீடு திரும்பிய மாணவி, பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடந்தபோது, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மாணவி, பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

9ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

இயற்கை அனர்த்தம் காரணமாக 29 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன

கைகளை வெட்டிக் கொண்ட 41 மாணவர்கள்!!

வெள்ளவத்தை கட்டிட உரிமையாளர் விளக்கமறியலில்