சூடான செய்திகள் 1

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இருவர் கைது

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இரண்டு பேர் நொச்சியாகம – ஹில்மில்லகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நொச்சியாகம காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் 30 மற்றும் 40 வயதான வெயாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர்கள் தம்புத்தேகம நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

 

Related posts

புதிய வீதி ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க 2 வார கால அவகாசம்

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்