நீண்ட வருடங்களாக மூதூர் வேதத்தீவு மக்கள் எதிர்நோக்கிய குடிநீர் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இன்று (29) புதன்கிழமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நீர்வழங்கள் அமைச்சின் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மூதூர் ஷாபி நகர் – வேதத்தீவு பகுதிக்கான 1600 மீட்டர் நீளமுடைய குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, தேசிய மக்கள் கட்சியின் ஏற்பாட்டின் கீழ், மூதூர் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சப்றான் அவர்களின் தலைமையில் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” எனும் தொணிப் பொருளில் இடம்பெற்றது.
மூதூர் வேதத்தீவு கிராம மக்கள் பல தசாப்தங்களாக ஷவர் நீரை அருந்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிகழ்வில் நீர் வழங்கல் திணைக்கள அதிகாரி அறபாத் விஷேட அதிதியாக கலந்து கொண்டு திட்டத்தை பார்வையிட்டார்.
மேலும், மூதூர் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சப்றான் தேசிய மக்கள் சக்தியின் வட்டார வேட்பாளர், வேதத்தீவு கிராம உத்தியோகத்தர், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், மற்றும் அக்கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வேதத்தீவு மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதாகவும், இனி அவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறும் நம்பிக்கையில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-முஹம்மது ஜிப்ரான்
