வகைப்படுத்தப்படாத

வேகமாக பரவி வரும் அம்மை நோய்

(UTV|PHILLIPINE) பிலிப்பைன்சில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் குறித்து அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடம் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலா உட்பட பல்வேறு இடங்களில் அம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 1813 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 பேர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வைரஸினால் முதலில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பின்னர் கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, உடலின் அனைத்து இடங்களிலும் சிவப்பு நிறத்தில் தடித்து இருக்கும்.

இவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

வெனிசூலா எல்லையில் கலவரம்

சிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி

Power disruptions likely in several areas