இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக 100.000 டொலர்களை – லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான யூசுப் அலி வழங்கியுள்ளார்.
(இலங்கைப் பெறுமதி 32 மில்லியன்) அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு நேரடியாக சென்று அவர் இதனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பதில் யூசுப் அலியின் பங்களிப்பு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தப் பங்களிப்பு (Lulu Group) நிறுவனத்தின் கருணைக்கு சான்றாகுமென இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
